Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திமுகவை விரைவாக வீழ்த்துவது முக்கியமானது.. கூட்டணி குறித்து பிரதமர் மோடி தமிழில் ட்வீட்..!

Advertiesment
Edappadi Modi

Mahendran

, சனி, 12 ஏப்ரல் 2025 (08:53 IST)
நேற்று  சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ‘அதிமுக பாஜக கூட்டணியை உறுதி செய்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இந்த கூட்டணி குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் தமிழில் ட்வீட் செய்து உள்ளார். அந்த ட்வீட்டில் அவர் கூறி இருப்பதாவது:
 
வலுவாக இணைவோம், தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக ஒன்றுபடுவோம்! 
 
தேசிய ஜனநாயகக் கூட்டணி என்ற குடும்பத்தில் அஇஅதிமுக இணைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் இதர கூட்டாளிகளுடன் ஒன்றிணைந்து, நாம் தமிழ்நாட்டை முன்னேற்றத்தின் புதிய உச்சங்களுக்குக் கொண்டுசெல்வோம்; 
 
மாநிலத்திற்கு அயராது பாடுபடுவோம். மாமனிதர் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா அவர்களின் தொலைநோக்குப் பார்வையை செயல்படுத்தும்  ஓர் அரசை நாம் உறுதிசெய்வோம். 
 
தமிழ்நாட்டின் நலனுக்கும், முன்னேற்றத்திற்கும், தமிழ்க் கலாச்சாரத்தின் தனித்துவத்தைப் பாதுகாப்பதற்கும் ஊழல் மலிந்த, பிரிவினைவாத திமுகவை விரைவாக வீழ்த்துவது முக்கியமானது. அதனை நமது கூட்டணி செய்து முடிக்கும். 
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

17 வயது பிளஸ் 2 மாணவியை கர்ப்பமாக்கிய 60 வயது முதியவர்.. போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு..!