Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விஜயகாந்தின் சூப்பர் ஹிட் படத்தின் ரி ரிலீஸ் அறிவிப்பு… உற்சாகத்தில் ரசிகர்கள்!

Advertiesment
Actor Vijay

vinoth

, திங்கள், 14 ஏப்ரல் 2025 (14:19 IST)
தமிழ் சினிமாவின் மூத்த நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த  2023 ஆம் ஆண்டு காலமானார். அதையடுத்து அவருக்கு பெருவாரியான ரசிகர்கள் ஒன்றாக திரண்டு அஞ்சலி செலுத்தினர். அவரின் உடலில் கோயம்பேட்டில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்யப்பட்டது. சமீபகாலமாக இவ்வளவு பேர் கலந்துகொண்ட ஒரு இறுதி ஊர்வலத்தைத் தமிழ்நாடு காணவில்லை.

விஜயகாந்த் இறப்பதற்கு சில ஆண்டுகள் முன்பாகவே அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்தார். அதன் காரணமாக அவர் கட்சிப் பணிகளை மேற்கொள்ளாமல் வீட்டில் ஓய்வில் இருந்தார். அதன் காரணமாக கட்சி பொறுப்புகளை அவர் மனைவி பிரேமலதா விஜயகாந்த் பார்த்துக்கொண்டார். ஆனாலும் அவர் கட்சி அப்போது மிகப்பெரிய வீழ்ச்சியை சந்தித்தது.

இந்நிலையில் தற்போது விஜயகாந்த் ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது. விஜயகாந்த் நடிப்பில் 2020 ஆம் ஆண்டு ரிலீஸாகி சூப்பர் ஹிட் ஆன வல்லரசு திரைப்படம் விரைவில் ரி ரிலீஸ் செய்யப்படும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

15 விளம்பரப் படங்களை வேண்டாம் என சொல்லிவிட்டேன்… நடிகை சமந்தா பகிர்ந்த தகவல்!