Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அன்று லேடி vs மோடி: இன்று மோடி, லேடிக்கு புகழாரம்!!

Advertiesment
அன்று லேடி vs மோடி: இன்று மோடி, லேடிக்கு புகழாரம்!!
, ஞாயிறு, 24 பிப்ரவரி 2019 (10:57 IST)
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலிதாவின் 71 வது பிறந்தநாள் இன்று கொண்டாப்பட்டு வருகிறது. அதிமுகவினர் இதனை ஒரு விழாவாக கொண்டாடி வருகின்றனர். 

 
71 வது பிறந்த நாள் என்பதால் இந்த நாளில் அதிமுகவினர் 71 லட்சம் மரக்கன்றுகளை நட முடிவு செய்துள்ளனர். மேலும் பல்வேறு நலத்திட்டங்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 
ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு பல அரசியல் தலைவர்கள் இந்நாளில் அவரை நினைவுகொள்கின்றனர். அந்த வகையில் மோடி ஜெயலலிதாவின் பிறந்த நாளில் தனது டிவிட்டர் பக்கத்தில் அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார். 
webdunia
அதில், தமிழகத்தின் வளர்ச்சியில் ஜெயல்லைதாவின் பங்கு எப்போதுமே உண்டு. தலைமுறைகள் பல கடந்தும் தமிழகத்தில் அவர் நினைவு இருக்கும். ஜெயலலிதா ஒரு சிறந்த நிர்வாகி, கருணையுள்ளம் கொண்டவர். 
 
ஜெயலலிதாவின் பல நலத்திட்டங்களால் எண்ணற்ற ஏழை மக்கள் பலனடைந்துள்ளனர் என்று பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
 
கடந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது ஜெயலலிதா லேடியா? மோடியா? என மக்கள் மத்தியில் பேசியது மிகவும் பிரபலமானது. ஆனால், இப்போது அதிமுக - பாஜகவுடன் கூட்டணி வைத்து நாடளுமன்ற தேர்தலை சந்திக்க உள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடிகர் தாடி பாலாஜியிடம் போலீஸ் விசாரணை