Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பாஜக - அதிமுக கூட்டணிக்கு பின் ஜெயலலிதா ஆவி: திகில் கிளப்பும் உதயகுமார்

Advertiesment
அதிமுக
, புதன், 20 பிப்ரவரி 2019 (18:22 IST)
நாடளுமன்ற தேர்தலில் போட்டியிட அதிமுக தனது கூட்டணியை முடிவு செய்துள்ளது. பாமகவிற்கு 7 தொகுதிகளையும், பாஜகவிற்கு 5 தொகுதிகளை வழங்கியுள்ளது. 
 
இந்நிலையில் தேமுதிகவுடனான கூட்டணி தொகுதி பங்கீடு மட்டும் இழுபறியாக உள்ளது. இதுவும் விரைவில் உறுதி செய்யப்படும் என தெரிகிறது. அதிமுகவின் கூட்டணி முடிவுகளால் அதிமுகவினர் மகிழ்ச்சியில் உள்ளனர். 
 
அந்த வகையில் கூட்டணி முடிவுகள் குறித்து தனது கருத்தை வெளியிட்டுள்ளார் அமைச்சர் உதயகுமார். அவர் கூறியதாவது, ஜெயலலிதாவின் ஆன்மாவின் ஆசியோடு கூட்டணிகள் இறுதி செய்யப்பட்டுவிட்டன. முதல்வரின் உடம்பினுள் ஜெயலலிதாவின் ஆவி புகுந்து இத்தகைய கூட்டணி பேச்சுவார்த்தையை சுமூகமாக நடத்தி முடித்துவிட்டது. 
 
அதிமுகவின் மெகா கூட்டணியை பார்த்து திமுக கொண்டர்கள் திகைத்து போயுள்ளனர். பூஜ்ஜியத்துடன் எத்தனை பூஜ்ஜியங்கள் சேர்ந்தாலும் ராஜ்ஜியம் அமைக்க முடியாது. 
 
மேலும், மக்களவை தேர்தலில் போட்டியிட அமமுகவினர் யாரும் விரும்பவில்லை. அட போட்டியிட ஆளே இல்லை என டிடிவி தினகரனையும் விமர்சித்து பேசியுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ராணுவ வீரரின் இறுதிச்சடங்கில் ஷூ அணிந்திருந்த அமைச்சர்கள்... கடுப்பான உறவினர்கள்