வரும் பாராளுமன்ற தேர்தலுக்காக அனைத்து தேசிய மற்று மாநில கட்சிகளும் பரபரப்பாக இயங்கி வருகின்றன. கூட்டணி பேச்சு வார்த்தைகளும் சுமூகமாக நடந்து கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் ஆங்கில நாளிதழ் ஒன்று சுமார் 2 லட்சம் பேரிடம் நடத்திய கருத்துக் கணிப்பில் அடுத்த பிரதமராக மோடி வர வாய்ப்புள்ளதாகவும், அவருக்கு சென்ற தேர்தலை விட தற்போது பல மடங்கு ஆதரவு பெருகியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த பிப்ரவரி 11 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை 2 லட்சம் பேரிடம் ஆன்லைன் மூலமாக இந்தக் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டதாகவும், இதில் 9 மொழிகளில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர்கள் அனைவரும் ஆன்லைனில் பதில் சொன்னதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இந்தக் கருத்துக்கணிப்பில் பாராளுமன்ற தேர்தலில் அடுத்து பிரதமராக சிறப்பாக ஆட்சியை தரப்போவது யார் என்ற கேள்விக்கு 86 சதவீதம் பேர் பிரதமர் நரேந்திர மோடி என்றே ஆதரவு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
இந்தக் கருத்துக் கணிப்பில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இரண்டாம் இடத்தில் உள்ளதாகவும் அவருக்கு 8.33 சதவீதம் பேர் ஆதரவு அளித்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கின்றன.