இந்தி தெரியாது போடா என்ற வாசகத்தை மாற்றி போட்டு அதே பல மீம்கள் உருவாகி டிரண்ட் ஆகி வருகின்றன.
இந்தி திணிப்புக்காக தமிழகமே ஒட்டுமொத்தமாகக் குரல் கொடுத்து வருகிறது. இந்நிலையில் திரையுலகைச் சேர்ந்த இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா உள்பட ஒருசில திரை நட்சத்திரங்கள் திடீரென இந்தி தெரியாது போடா மற்றும் ஐ எம் எ தமிழ் பேசும் இந்தியன்’ போன்ற வாசகங்கள் அடங்கிய டிசர்ட்களை அணிந்து பரபரப்பை ஏற்படுத்தினார்கள். இந்த ஹேஷ்டேக் சமூகவலைதளங்களில் ட்ரண்ட் ஆனதை அடுத்து இப்போது கர்நாடகாவிலும் இதைப் பலரும் தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில் அந்த வாசகத்தை வேறு மாதிரி மாற்றி அஜித்தைக் கேலி செய்யும் விதமாக ஒரு படத்தை வெளியிட்டுள்ளது ஆனந்த விகடன். அதில் ‘வெளியே வரமாட்டேன் போடா’ என்ற வாசகம் தாங்கிய டிஷர்ட்டை அஜித் அணிந்திருப்பது போல புகைப்படத்தை வெளியிட, அதைப் பார்த்த அஜித் ரசிகர்கள் கோபமாகி ஆனந்த விகடனை ட்ரோல் செய்ய ஆரம்பித்துள்ளனர்.
இந்நிலையில் அதே போல மோடிக்கும் சில வாசகங்கள் உருவாக்கப்பட்டு அந்த மீம்ஸ்களும் ட்ரண்ட் செய்யப்பட்டு வருகின்றன. அதில் சீனா பற்றி பேச மாட்டேன் போடா, மற்றும் வேலை கொடுக்க மாட்டோம் போடா என மோடி அரசை கேலி செய்யும் விதமாக வாசகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.