Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

”ராமர் - லட்சுமணன்” ஈபிஎஸ் - ஓபிஎஸ் பரஸ்பர உறவு குறித்து அமைச்சர் பேச்சு!!

”ராமர் - லட்சுமணன்” ஈபிஎஸ் - ஓபிஎஸ் பரஸ்பர உறவு குறித்து அமைச்சர் பேச்சு!!
, சனி, 19 செப்டம்பர் 2020 (12:45 IST)
முதல்வரும், துணை முதல்வரும் ராமர் - லட்சுமணன் போல ஒற்றுமையாக உள்ளனர் என அமைச்சர் உதயகுமார் பேட்டி.
 
சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 6 மாத காலமே உள்ள நிலையில் திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகள் அதற்காக தயாராகி வருகின்றன. திமுகவில் முதல்வர் வேட்பாளர் ஸ்டாலின் என்பது உறுதியாகிவிட்ட நிலையில் அதிமுகவில் யார் என்பது இன்னும் தெரியவில்லை. இது சம்மந்தமாக சில நாட்களாக சர்ச்சைகள் அதிமுகவில் எழுந்துள்ளன. 
 
இந்நிலையில் சென்னையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வந்த போது ”ஜெயலலிதாவின் அரசியல் வாரிசே” எனவும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நுழைந்த போது “நிரந்த முதல்வரே” என்றும் கோஷங்கள் எழுப்பட்டது. 
 
அப்போதே பிரச்சனை வரும் எதிர்பார்த்த நிலையில், அப்போது அல்லாமல் கட்சியில் முதல்வர் தரப்பினர் ஆதிக்கம் செலுத்துவதாகவும், இணைப்பின்போது ஒப்புக்கொண்ட 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவை அமைக்க வேண்டும் என ஓபிஎஸ் தரப்பினர் கோரிய போது பிரச்சனை வெடித்துள்ளது.  
webdunia
வழிகாட்டுதல் குழுவை அமைக்க முடியாது என்பதில் திட்டவட்டமாக இருக்கும் முதல்வர் தரப்பினார் ஆலோசனை கூட்டத்தில் காரசார விவாதங்கள் நடைபெற்றது என் அதகவல் வெளியானதால் அதிமுகவில் மீண்டும் ஈபிஎஸ், ஓபிஎஸ் என பெரிய பிளவு ஏற்படவுள்ளதாக செய்திகள் வெளியானது.
 
ஆனால் அதிமுக ஒற்றுமையுடன் தான் இருக்கிறது என அமைச்சர் உதயகுமார் பேட்டியளித்துள்ளார். அவர் தனது பேட்டியில், அதிமுக ஒற்றுமையுடன், ராணுவ கட்டுப்பாட்டுடன் தான் இருக்கிறது.  அனைவரும் கருத்துகளை தெரிவிக்கவே அவசரக்கூட்டம்.
 
முதல்வரும், துணை முதல்வரும் ராமர் - லட்சுமணன் போல ஒற்றுமையாக உள்ளனர். முதல்வர் வேட்பாளர் குறித்து பேசக்கூடாது என அதிமுக தலைமை அறிவுறுத்தி உள்ளது. எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் அமைக்கும் கூட்டணியால் எதிர்க்கட்சிகள் திக்குமுக்காடிபோகும் என பேசியுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கழிவறையில் இருக்கும் பெண்ணை வீடியோ எடுத்த டிக்கெட் பரிசோதகர்!