ஜெனிவா கூட்டத்தில் பங்கேற்று பேச திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு ஐநா மனித உரிமை ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது. ஐநா மனித உரிமை ஆணையக் கூட்டம் வரும் செப்டம்பர் மாதம் 9ஆம் தேதி முதல் 27 ம் தேதி வரை நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது
ஐநா மனித உரிமைகள் ஆணையம் என்பது பன்னாட்டு சட்டங்கள் அமைய கடந்த 1948 ஆம் ஆண்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஓரு ஐக்கிய நாடுகள் நிறுவனமாகும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளைப் பேணவும் அதன் மேன்மைக்காக உழைக்கவும் ஏற்படுத்தப்பட்ட இந்த அமைப்பின் கூட்டம் தான் வரும் செப்டம்பரில் நடைபெறவுள்ளது.
இந்த ஆணையத்தின் நடப்புத் தலைவராக தென்னாபிரிக்காவைச் சேர்ந்த நவநீதம் பிள்ளை என்பவர் உள்ளார். இவர் கடந்த 2008ஆம் ஆண்டு ஜூலை 28ஆம் தேதி ஐநா பொதுச்சபைக் கூட்டத்தில் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு தமிழர் ஐநா மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக இருக்கும் நிலையில் இன்னொரு தமிழர் இந்த கூட்டத்தில் பேச அழைப்பு விடுக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது