Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

திக்! திக் ! திக் ! வேலூர் தொகுதியில் துரைமுருகன் மகன் வேட்பு மனு ஏற்கப்படுமா ?

திக்! திக் ! திக் ! வேலூர் தொகுதியில் துரைமுருகன் மகன் வேட்பு மனு ஏற்கப்படுமா ?
, புதன், 17 ஜூலை 2019 (16:41 IST)
கடந்த பாராளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி 350 மேற்பட்ட தொகுதியில் வெற்றி பெற்று, பிரதமர் மோடி தலைமையில்  இரண்டாவது முறையாக மத்தியில் ஆட்சி அமைத்தது.
 
இதில்  தமிழகத்தில் திமுக கூட்டணியில் இடம்பெற்ற காங்கிரஸ் பலமான வெற்றியை பதிவு செய்தது. இதில் தேனி தொகுதியில் மட்டும் இந்தக் கூட்டணி தோல்வி அடைந்தது. வேலூரில் தேர்தல் பிரசாரத்தின் போது திமுக பிரமுகருக்கு நெருக்கமானவரின் குடோனில் கோடிக்கணக்கான பணம் பறிமுதல் செய்யப்பட்டதால், வாக்காளர்களுக்கு ஓட்டுக்குப் பணம் தரப்பட்டதாக வேலுரில் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் வேலூரில் எம்பி தேர்தலுக்கு ஜுலை 11 ஆம்தேதி முதல் ஜூலை 18 ஆம் தேதி வரை வேட்பு மனுதாக்கல், செய்யலாம் என்றும் , ஜுலை 19 ஆம் தேதி வேட்பு மனுக்களின் மீதான பரிசீலனை என்றும், வேட்பு மனுவௌ திரும்ப பெற ஜுலை 22 ஆம் தேதி கடைசி நாள் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
 
மேலும்  வேலூர் மக்களவைத் தொகுதிக்கு ஆகஸ்ட் 5 ஆம் தேதி என்றும், ஆகஸ்ட் 9 ஆம் தேதி  வாக்கு எண்ணிக்கை என்றும் இந்தியத்  தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
 
தற்போது அனைத்து கட்சிகளூம் தங்கள் பிரச்சாரத்தை தொடர்ந்து வேலூரில் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் வேலூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஏசி சண்முகம் உள்ளிட்ட 21 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர்.
இந்நிலையில்  வேட்பு மனுதாக்கல் செய்ய நாளை கடைசி நாள் என்பதால் இன்று திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த்  மனுதாக்கல் செய்தார். ஏற்கனவே கதிர் ஆனந்த் மீது தேர்தல் ஆணையம் மற்றும் வருவாய் வருத்துறையினர் தொடர்ந்த வழக்குகள் நிலுவையில் இருப்பதால் அவரது வேட்புமனுநிராகரிக்கப்பட்டால் அதற்கு மாற்றாக பலம் வாய்ந்த மற்றொரு வேட்பாளரை அங்கு களமிறக்குவது தொடர்பாக கடந்த 15 ஆம் தேதி திமுக தலைவர்  ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற மாவட்ட செயலர்கள் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நீங்க வயசானா எப்படி இருப்பீங்க - இணையத்தில் ட்ரெண்டாகும் ஃபேஸ் ஆப் சேலஞ்ச்