Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வேலூர் தேர்தலில் தோற்கக் கூடாது : திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் அட்வைஸ் !

Advertiesment
வேலூர் தேர்தலில்  தோற்கக் கூடாது : திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் அட்வைஸ் !
, செவ்வாய், 16 ஜூலை 2019 (14:21 IST)
கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று, பிரதமர் மோடி தலைமையில் இரண்டாவது முறையாக மத்தியில் ஆட்சி அமைத்துள்ளது.
தமிழகத்தில் திமுக கூட்டணியில் காங்கிரஸ்  இணைந்து பலமான வெற்றியை பதிவு செய்தது. இதில் தேனி தொகுதியில் மட்டும் இந்தக் கூட்டணி தோல்வி அடைந்தது. வேலூரில் தேர்தல் பிரசாரத்தின் போது திமுக பிரமுகருக்கு நெருக்கமானவரின் குடோனில் கோடிக்கணக்கான பணம் பறிமுதல் செய்யப்பட்டதால், வாக்காளர்களுக்கு ஓட்டுக்குப் பணம் தரப்பட்டதாக வேலுரில் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் வேலூரில் எம்பி தேர்தலுக்கு ஜுலை 11 ஆம்தேதி முதல் ஜூலை 18 ஆம் தேதி வரை வேட்பு மனுதாக்கல், செய்யலாம் என்றும் , ஜுலை 19 ஆம் தேதி வேட்பு மனுக்களின் மீதான பரிசீலனை என்றும், வேட்பு மனுவௌ திரும்ப பெற ஜுலை 22 ஆம் தேதி கடைசி நாள் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்து.
 
மேலும்  வேலூர் மக்களவைத் தொகுதிக்கு ஆகஸ்ட் 5 ஆம் தேதி என்றும், ஆகஸ்ட் 9 ஆம் தேதி  வாக்கு எண்ணிக்கை என்றும் இந்தியத்  தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
 
இந்நிலையில் அனைத்து கட்சிகளூம் தங்கள் பிரச்சாரத்தை தொடர்ந்து வேலூரில் நடத்தி வருகின்றனர். தற்போது  வேலூர் தொகுதியில் திமுக தோற்கக் கூடாது என்று திமுக தலைவர் ஸ்டாலின் கட்சி தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் ஆளங்கட்சியினர் பரப்பும் தகவல்களை  பொய்யென்று நிருபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். அதனால் வேலூர் தேர்தலில் நாம் வெற்றி பெற வேண்டும் என்று திமுக தொண்டர்களை ஸ்டாலின் உசுப்பேற்றி இருக்கிறார், என்று தலவல்கள் வெளியாகின்றது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

யார் இந்த உதயநிதி? ஹெவி பில்டப் கொடுக்கும் அன்பில் மகேஷ்!