Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மெட்ரோ ரயிலில் பயணம் செய்தார் திமுக தலைவர் ஸ்டாலின்

Advertiesment
மெட்ரோ ரயிலில் பயணம் செய்தார் திமுக தலைவர் ஸ்டாலின்
, வியாழன், 25 ஜூலை 2019 (07:45 IST)
நேற்று முன்தினம் திருநெல்வேலி முன்னாள் மேயர் உமாமகேஸ்வரி, அவரது கணவர் மற்றும் பணிப்பெண்ணையும் மர்ம நபர்கள் சிலர் வெட்டி படுகொலை செய்ததை கண்டனம் தெரிவித்து திமுக தலைவர் மு க ஸ்டாலின், நேற்று நெல்லைக்கு நேரில் சென்று உமாமகேஸ்வரியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்
 
அதன் பின் செய்தியாளர்களிடம் அவர் கூறியபோது, 'உமாமகேஸ்வரி படுகொலைக்கு காரணமானவர்களை உடனடியாக கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று அவர் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தார் 
 
இதனை அடுத்து நெல்லையில் இருந்து மதுரைக்கு காரிலும், மதுரையில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் திரும்பிய மு க ஸ்டாலின், சென்னை விமான நிலையத்திலிருந்து தேனாம்பேட்டை செல்வதற்காக மெட்ரோ ரயிலில் பயணம் செய்தார்
 
webdunia
திமுக தலைவர் ஸ்டாலின் திடீரென மெட்ரோ ரயிலில் பயணம் செய்தது அந்த ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்த சக பயணிகளை இன்ப அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அவருடன் பயணிகள் சிலர் புகைப்படமும் செல்பியும் எடுத்துக் கொண்டனர். திமுக தலைவரும் பயணிகளுடன் சிரித்தபடியே போஸ் கொடுத்தார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பேருந்தில் ரெளடித்தனம் செய்த மாணவர்கள் கைகள் உடைப்பு! யார் காரணம்?