புதுக்கோட்டை மாவட்டத்திற்கு இன்று வருகை தந்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், ரூ.767 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்து, மகளிர் உரிமைத்தொகை குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். அவர் மேலும் கூறியதாவது:
இது உதவித்தொகை அல்ல, உரிமைத்தொகை" என்று திட்டவட்டமாகத் தெரிவித்த முதல்வர், தகுதியுள்ள அனைத்து மகளிருக்கும் இந்த தொகை நிச்சயம் கிடைக்கும் என்று உறுதி அளித்தார்.
மேலும், "திராவிட மாடல் 2.0 அரசிலும் இந்தக் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் நிச்சயம் தொடரும்" என்றும் அவர் அறிவித்தார். இதுவரை 1 கோடியே 14 லட்சம் பெண்களுக்கு 27 மாதங்களில் உரிமைத் தொகை வழங்கப்பட்டுள்ளதாக அவர் பெருமிதம் தெரிவித்தார்.
தேர்தல் நெருங்கி வருவதால், வாக்காளர்கள் தங்கள் பெயர் பட்டியலில் இருப்பதை உறுதி செய்யுமாறு முதல்வர் வலியுறுத்தினார். அரியானா போன்ற மாநிலங்களில் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக வெளியான செய்திகளைக் குறிப்பிட்ட அவர், தமிழக வாக்காளர்கள் தங்கள் பட்டியலில் போலிகள் சேர்க்கப்பட்டுள்ளார்களா என்பதைக் கண்காணிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.