Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் அரசின் மாநில பாடல்! – முதல்வர் உத்தரவு!

Webdunia
வெள்ளி, 17 டிசம்பர் 2021 (13:15 IST)
தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை அரசின் மாநில பாடலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு விழாக்களில் தொடக்கமாக தேசிய கீதமும், தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்தும் பாடப்படுவது வழக்கமாக உள்ளது. இந்நிலையில் சமீபத்தில் சில நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படாமல் தேசிய கீதம் மட்டும் பாடப்பட்டு வந்தது சர்ச்சைக்குள்ளானது.

இந்நிலையில் தற்போது தமிழக அரசின் மாநில பாடலாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை அறிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அனைத்து அரசு விழாக்கள், பள்ளி, கல்லூரி நிகழ்ச்சிகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட வேண்டும் என்றும், அனைவரும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு எழுந்து நின்று மரியாதை அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எழுந்து நின்று மரியாதை செய்வதில் இருந்து மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

‘நான்கு தலைமுறை வாழ்ந்த மாஞ்சோலை எஸ்டேட்டை விட்டு எங்கே போவது?’ - தொழிலாளர்கள் சொல்வது என்ன?

நான் இறந்துவிட்டேன்.. என் தொகுதி காலியாகிவிட்டது: லால்குடி எம்.எல்.ஏ அதிர்ச்சி பதிவு..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பு..! பின் வாங்கிய அதிமுக..! காரணம் என்ன.?

விஜய்யை அடுத்து அஜித்தும் அரசியல் கட்சி தொடங்குவார்: ஈவிகேஎஸ் இளங்கோவன்

சென்னை விமான நிலையத்திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்.. கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments