தமிழகத்தில் வெளிநாட்டிலிருந்து வந்த ஒருவருக்கு ஒமிக்ரான் உறுதியான நிலையில், வெளிநாட்டு பயணிகளுக்கு மேற்கொள்ளப்பட்டு வரும் சோதனைகள் குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.
உலகம் முழுவதும் ஒமிக்ரான் பாதிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் தமிழகத்தில் விமான நிலையங்களில் பலத்த கட்டுப்பாடுகள், சோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நைஜீரியாவிலிருந்து தமிழகம் வந்த ஒருவருக்கு ஒமிக்ரான் உறுதியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், விமான நிலையங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் சோதனைகள் குறித்து பேசியுள்ள அமைச்சர் மா.சுப்பிரமணியன் ”வெளிநாடுகளில் இருந்து வந்த 70 பயணிகளுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அவர்களில் 28 பேருக்கு ஒமிக்ரான் அறிகுறியான எஸ் ஜீன் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அவர்களது மாதிரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டது. அவர்களில் 8 பேருக்கு டெல்டா வகை கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.