அதிமுக ஆட்சியில் உற்பத்தியை அதிகரிப்பதாக கூறி மைனஸில் தள்ளிவிட்டதாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் திமுக ஆட்சியமைத்த நிலையில் நாளை முதன்முறையாக பட்ஜெட் தாக்கல் நடைபெற உள்ளது. மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்ற பின் நடக்கும் முதல் பட்ஜெட் தாக்கல் இதுவாகும். இந்நிலையில் இதற்கு முன்னதாக சமீபத்தில் அதிமுகவின் 10 ஆண்டு கால ஆட்சியின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை வெளியானது.
இதற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்டோர் எதிர்மறையான கருத்துகளை தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் “அதிமுக அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றியதா? ஜெயலலிதா வெளியிட்ட தொலைநோக்கு பார்வை திட்டம் நிறைவேற்றப்பட்டதா?” என கேள்வி எழுப்பியுள்ளார்,
மேலும் உற்பத்தியை அதிகரிப்பதாக கூறி அதிமுகவினர் மாநில வளர்ச்சியை மைனஸில் தள்ளிவிட்டதாக பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.