தமிழகத்தில் நடப்பு மின் கட்டண விகிதம் உயர்ந்துள்ளதாக பலர் கூறி வருவது குறித்து டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
கொரோனா காரணமாக கடந்த சில மாதங்களாக மின் கணக்கீடு மேற்கொள்ளப்படாத நிலையில் முந்தைய மாத மின் கட்டணம் செலுத்தப்பட்டது. இந்நிலையில் தற்போது எடுக்கப்பட்ட மின் கணக்கீட்டில் பலருக்கு கட்டணம் அதிகமாக வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து கேள்வி எழுப்பியுள்ள அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் “அறிவிக்கப்படாத மின் கட்டண உயர்வு தமிழ்நாடு முழுவதும் செயல்படுத்தப்படுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து தமிழக அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும். வெளிப்படையான நிர்வாகம் பற்றி நிறைய பேசும் தி.மு.க அரசு மின் கட்டண விவகாரத்தில் மக்களிடம் இப்படி மறைமுகமான கட்டணக் கொள்ளையை அரங்கேற்றுவது ஏன்?” என கேள்வி எழுப்பியுள்ளார்.