Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சற்றுநேரத்தில் செயற்குழு கூட்டம்... முதல்வர் வீட்டிற்கு படையெடுக்கும் முக்கியஸ்தர்கள்!!

Advertiesment
சற்றுநேரத்தில் செயற்குழு கூட்டம்... முதல்வர் வீட்டிற்கு படையெடுக்கும் முக்கியஸ்தர்கள்!!
, திங்கள், 28 செப்டம்பர் 2020 (09:40 IST)
இன்னும் சற்றுநேரத்தில் அதிமுக செயற்குழு கூட்டம் கூடவுள்ள நிலையில் முக்கியதஸ்கர்கள் சிலர் முதல்வரை சந்தித்து வருகின்றனர். 

 
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் இன்னும் ஒரு சில மாதங்களில் நடைபெற இருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் சட்டமன்ற தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன. மேலும் கூட்டணி பேச்சு வார்த்தைகளும் ஆரம்பிக்கப்பட்டுவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 
 
இந்நிலையில் அதிமுக செயற்குழு இன்று ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் கூட உள்ளது. அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் இந்த செயற்குழு கூட்டம் நடைபெறும். அதிமுக செயற்குழு கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள் உள்பட யாரும் செல்போன் கொண்டு செல்ல அனுமதியில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்த கூட்டத்தில் முதல்வர் வேட்பாளர் யார் ? கட்சிக்கு ஒற்றை தலைமையா ?  என்ற விவாதங்களோடும் 11 பேர் கொண்ட சிறப்பு வழிகாட்டு குழு அமைக்க வேண்டும் உள்ளிட்ட பிரச்னைகள் இருக்கும் சூழ்நிலையில் செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது. 
 
இன்னும் சற்று நேரத்தில் செயற்குழு கூட்டம் கூட உள்ள நிலையில், சென்னையில் உள்ள முதல்வர் இல்லத்தில் முதல்வர் பழனிசாமியுடன் அமைச்சர் கடம்பூர் ராஜூ திடீர் சந்திப்பு. மேலும், அமைச்சர் நிலோஃபர் கபிலும் முதல்வரை சந்தித்தார்.  
 
அதேபோல, வேளாண் சட்டத்திற்கு எதிராக தமிழகம் முழுவதும் இன்று போராட்டம் நடைபெறும் சூழலில் வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு முதல்வர் பழனிசாமியுடன் சந்திப்பு நடத்தியுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அதிமுக பிரமுகர் தலை துண்டித்து கொலை; தனிநபர் விரோதத்தால் வெறிசெயல்!