Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஒழிந்தது திமுக; விரக்தியில் ஸ்டாலின்: அடித்துவிடும் வேலுமணி!

Advertiesment
ஒழிந்தது திமுக; விரக்தியில் ஸ்டாலின்: அடித்துவிடும் வேலுமணி!
, புதன், 8 ஜூலை 2020 (12:23 IST)
அரசுக்கு பெருகி வரும் ஆதரவை பொறுத்துக்கொள்ள முடியாமல் மு.க.ஸ்டாலின் குற்றம் சுமத்துவதாக அமைச்சர் வேலுமணி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 
 
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு, உண்ணவும் நினையாது, உறங்கவும் முனையாது, கொரோனாவிலிருந்து தமிழகத்து மக்களை பூரணமாய் மீட்கும் வகையில் தொடர்ந்து இரவு, பகல் பாராது போராடி வருகிறார் எளிமை சாமானியர் எடப்பாடி பழனிசாமி.
 
கொரோனா கொள்ளை நோய்க்கு எதிராக பெரும் போராட்டத்தை நிகழ்த்திவரும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் நல்ல அபிப்ராயத்தை பொறுக்க முடியாமல், வகையற்ற வாதங்களை வார்த்தைகளாக்கி அறிக்கைகளை நித்தம் ஒன்றாய் விடுத்து வருகிறார் மு.க.ஸ்டாலின். 
webdunia
இது போல அறிக்கைகளை விட்டு மு.க.ஸ்டாலின் காட்டுகிற பூச்சாண்டிகளுக்கு எல்லாம் நாங்கள் ஒருபோதும் அஞ்ச மாட்டோம். மக்கள் மன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு பெருகி வரும் ஆதரவை பொறுத்துக்கொள்ள முடியவில்லை ஸ்டாலினுக்கு. 
 
குறிப்பாக விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தலில் பெற்ற இமாலாய வெற்றிக்குப்பிறகு, இனி தமிழ்நாட்டு அரசியலில் திமுகவிற்கு எதிர்காலம் இல்லை என்பது தெளிவாக புரிந்து விட்டதால், அரசின் மீது பல்வேறு பொய்யான குற்றச்சாட்டுகளை ஆதாரமில்லாமல், வெளியிட்டு மு.க.ஸ்டாலின் உச்சகட்ட விரக்தியை வெளிப்படுத்துகிறார் என குறிப்பிட்டுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சேலத்தையும் இரண்டா பிரிச்சிடலாம்!? – அதிமுகவின் அரசியல் வியூகம்!