Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Monday, 21 April 2025
webdunia

அதிமுக பிரமுகர் தலை துண்டித்து கொலை; தனிநபர் விரோதத்தால் வெறிசெயல்!

Advertiesment
Tamilnadu
, திங்கள், 28 செப்டம்பர் 2020 (09:27 IST)
செங்கல்பட்டில் தனிநபர் விரோதம் காரணமாக அதிமுக பிரமுகர் தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்ட பொன்விளைந்த களத்தூர் பகுதியை சேர்ந்த அதிமுக பிரமுகர் சேகர். கடந்த ஞாயிற்று கிழமை காலை தனது நண்பர் ஒருவருடன் சாலையில் பேசிக்கொண்டிருந்த சேகரை அந்த பக்கமாக இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் கொண்ட கும்பல் திடீரென அரிவாள், கத்தியால் சேகரை தாக்கியுள்ளது. இதனால் நிலைகுலைந்த விழுந்த சேகரின் தலையை வெட்டி அங்கேயே போட்டுவிட்டு அந்த கும்பல் தப்பியது.

இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டபோது அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பொன்விளைந்த களத்தூர் ஊராட்சி தலைவராக இருந்த விஜயகுமாரை விரோதம் காரணமாக அதிமுக அவை தலைவராக இருந்த குப்பன் மற்றும் சிலர் இணைத்து கொலை செய்துள்ளனர்.

இந்த கொலை சம்பந்தமாக பழிவாங்க துடித்த விஜயகுமாரின் சகோதரர் சுரேஷ் குப்பன் மற்றும் சிலரை கடந்த சில ஆண்டுகளில் கொன்றுள்ளார். விஜயகுமார் கொல்லப்பட்ட வழக்கில் அதிமுக பிரமுகர் சேகருக்கும் தொடர்பிருந்ததாக தெரிகிறது. இதனால் சுரேஷ் மற்றும் அவரது ஆட்கள் தற்போது சேகரை கொன்றிருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் தலைமறைவான சுரேஷை தேடி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அப்படி என்ன பேசபோறாங்க? செயற்குழு கூட்டத்தில் போன்களுக்கு தடா...