மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டி இரண்டு வருடங்களுக்கு மேலாகியும் இன்னும் அந்த மருத்துவமனையை கட்டப்படவில்லை என அரசியல் கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பின்னர் அடிக்கல் நாட்டப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனைகள் தற்போது செயல்பட்டு கொண்டிருக்கும் நிலையில் மதுரையில் இன்னும் கட்டிட பணியே ஆரம்பமாகவில்லை என்ற தகவல் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
இந்த நிலையில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தான் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் ஆனால் வரும் 2026ஆம் ஆண்டுக்குள் பணிகள் முடிவடைந்து மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்று மத்திய இணை அமைச்சர் பாரதி பிரவீன் அவர்கள் தெரிவித்துள்ளார்
மேலும் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஆயிரத்து 970 கோடி ரூபாய் மத்திய அரசு ஒதுக்கி உள்ளதாகவும் அவர் தகவல் தெரிவித்து உள்ளார்