Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிரியாணி சாப்பிட்ட இளைஞர் உயிரிழப்பு

Advertiesment
chicken briyani
, வெள்ளி, 7 அக்டோபர் 2022 (14:44 IST)
திருவாரூரில்  நடைபெற்ற விழாவில் பிரியாணி சாப்பிட்ட செல்வ முருகன் என்ற  நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதது.

திருவாரூர் அருகே திருவாசல் மெயின் ரோடு என்ற பகுதியில் வசிப்பவர் செல்லத்துரை. இவரது மகன் விக்னேஷ். இவரது மனைவி மாரியம்மாள்(26). இவர் 5 மாதம் கர்ப்பமாக இருந்ததால், அவருக்கு 5 ஆம் மாதம் மருத்து கொடுக்கும் நிகழ்வு வீட்டில் நேற்று முன் தினம் நடந்தது.

அப்போது,  நடந்த விருந்தில் 5 வகையான சாதங்கள் விருந்தினர்களுக்குப் பரிமாறப்பட்டது. இந்த விருந்து சாப்பிட்டவர்களுக்கு கொஞ்ச நேரத்திலேயே வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால், அவர்களை  திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டனர்.

இதில்,15 பேர் உடல் நலம் குணமடைந்து வீட்டிற்குச் சென்றனர்.மீதம், கர்ப்பிணிப் பெண் மாரியம்மாள், உள்ளிட்ட 7 பேர் சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்த நிலையில், வேலங்குடியைச் சேர்ந்த செல்வமுருகன்(24) சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இதுகுறித்து, போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Edited by Sinoj
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

10 ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டுத் தற்கொலை.. இளைஞர் போக்சோ வழக்கில் கைது !