தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், தனது பிரச்சார கூட்டங்களுக்கு அனுமதி கோரிய வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், கூட்டங்களின்போது ஏற்படும் அசம்பாவிதங்கள் குறித்து கவலை தெரிவித்து, தவெக-வுக்கு பல அறிவுரைகளை வழங்கினர்.
கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள் போன்றோரை கூட்டங்களுக்கு வரவேண்டாம் என்று நீங்கள் கூறலாம். அதேபோல் கூட்டங்களில் ஒழுங்கீனங்கள் நிகழாமல் பார்த்துக்கொள்வதன் மூலம் நீங்கள் மற்ற கட்சிகளுக்கு ஒரு நல்ல முன்மாதிரியாக திகழலாமே?" என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
ரசிகர்கள் உயரமான இடங்களில் ஏறுவதாலோ அல்லது பிற அசம்பாவிதங்கள் நடந்தாலோ அதற்கு யார் பொறுப்பு ஏற்பது? இத்தகைய செயல்களை கட்சியின் தலைவர் மட்டுமே ஒழுங்குபடுத்த முடியும் என்று நீதிமன்றம் கூறியது.
பரப்புரைகளின்போது பொதுச்சொத்துகள் சேதப்படுத்தப்படுவதைத் தடுக்க, தவெக-வும் காவல்துறையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் எச்சரித்தது. இல்லையென்றால், நீதிமன்றமே நேரடியாக தலையிட வேண்டிய நிலை ஏற்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.