கருவூர் பசுபதீசுவரர் ஆலய நால்வர் அரங்கில் இன்று 4.1.2020 சனிக்கிழமை மாலை ஆன்மீக சொற்பொழிவு நடைபெற்றது
இந்நிகழ்ச்சியில், தமிழ்ச் செம்மல் மேலை பழநியப்பன் சிறப்புரையாளரை அறிமுகம் செய்து தொடக்க உரை ஆற்றினார்.
இதையடுத்து, சிறப்புரையாளர் தேவகோட்டை சேவுகன் அண்ணாமலை கல்லூரி மேனாள் முதல்வர் "சைவ சித்தாந்த இரத்தினம்" பேராசிரியர் சந்திரமோகன் அவர்கள் " திருவாசக உருக்கம்" என்ற தலைப்பில் திருக்குறளும் திருவாசகமும் "மந்திரங்கள் " என்றார் திருவாசகம் பல மாற்றங்களையும் ஏற்றங்களையும் வாழ்வில் தரும் என்றார்.
மேலும், வள்ளல் பெருமானால் நான் கலந்து என்கிறார் கேட்டால் புல் இனம் பறவைகள் கூட மோட்சம் அடையும் என்கிறார் வள்ளலார் என்றார்.
பரணி குமார், க.ப.பாலசுப்பிரமணியன் சின்னப்பன் , கார்த்திகேயன் , ேஷாபிகா பழனியப்பன் உள்ளிட்ட திரளானவர்கள் பங்கேற்றனர்.