கரூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில்  நீதிமன்றத்தில் பணியாற்றும் அலுவலர்களுக்கிடையேயான விளையாட்டுப் போட்டிகளை கரூர் மாவட்ட ஆட்சித் தலைவரும், மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியும் துவக்கி வைத்தனர்.
	விளையாட்டுப் போட்டிகளில் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் மாவட்ட நீதிபதி ஆகியோர் பங்கேற்றனர்
 
 			
 
 			
					
			        							
								
																	
	 
	இன்று மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நீதித் துறை அலுவலர்களுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகளை மாவட்ட அமர்வு நீதிபதி கிறிஸ்டோபர்  முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு அன்பழகன்  துவக்கி வைத்தார். 
	 
	மேலும், ஓட்டப்பந்தய போட்டிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் மாவட்ட நீதிபதி முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
	 
	இந்த ஓட்டப் பந்தயப் போட்டியில் மாவட்ட ஆட்சித் தலைவர்  முதலிடத்தைப் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.