Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உள்ளாட்சித் தேர்தலில் வாக்களித்த பின் பொங்கல் பரிசுத்தொகையான ரூ. 1000 பெற்றுக்கொள்ளலாம் - அமைச்சர்

Advertiesment
உள்ளாட்சித் தேர்தலில் வாக்களித்த பின் பொங்கல் பரிசுத்தொகையான ரூ. 1000 பெற்றுக்கொள்ளலாம் -   அமைச்சர்
, சனி, 21 டிசம்பர் 2019 (21:12 IST)
தமிழ்நாட்டில் டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி, கரூர் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர், ஆண்டான்கோயில் மேற்கு, ஆண்டான்கோயில் புதூர், பள்ளபாளையம், காக்காவாடி போன்ற பகுதிகளில் இரட்டை இலை, சுயேச்சை சின்னத்தில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் இன்று பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது, வாக்காளர்களிடம் திறந்தவெளி வாகனத்தில் பேசிய அவர், "தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் வழங்க உத்தரவிட்டார். ஆனால், திமுகவினர் நீதிமன்றம் சென்று தடையாணை பெற்றனர். எனவே தேர்தலில் வாக்களித்த பின், ஆயிரம் ரூபாய் பரிசுத் தொகையை வாக்காளர்கள் பெற்றுக் கொள்ளலாம்" என்றார். 
 
தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில் இரண்டு அமாவாசை மட்டுமே அதிமுக ஆட்சியில் இருக்கும் என்று முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதை மேற்கோள்காட்டிய விஜயபாஸ்கர் ரெண்டே அம்மாவாசையில் தாண்டிப் போய்விடும் என்று பதினாறு கட்சிகளுக்கு மேல் மாறிவிட்டு நேற்று 12 நேற்று 9 அம்மாவாசையம் இல்லை இன்றும் 15 அம்மாவாசையம் அதற்குப் பிறகு மீண்டும்   60 அம்மாவாசைக்கு இந்த ஆட்சி தொடரும் என்றும் நம்பிக்கையுடன் தெரிவித்தார்.
 
அதைத் தொடர்ந்து, மதுபான கடை மூலம் விஜயபாஸ்கருக்கு தரகு கிடைப்பதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், செந்தில்பாலாஜி கடத்திய 24 ஆயிரம் எரி சாராயம் கேரளா காவல் துறையினர் பிடித்தார்கள் எனக் கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நன்கு தூங்கி விட்டு வரும் கரூர் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி இங்கு வந்து போராடுவது எப்படி ? அமைச்சர் கேள்வி