Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எம்.எல்.ஏ.செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் பதிலடி !

Advertiesment
எம்.எல்.ஏ.செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் பதிலடி !
, வெள்ளி, 27 டிசம்பர் 2019 (20:25 IST)
மாட்டு வண்டிகளின் பிரச்சினை வைத்து அரசியல் செய்யும் மாஜி அமைச்சருக்கு அமைச்சர் பதிலடி – மாட்டுவண்டிகள் மணல் அள்ளக்கூடாது என்று வழக்கு போட்டவருடன் கூட்டு சேர்ந்துள்ளதே செந்தில் பாலாஜி தான் என்றும் கரூர் அருகே இரண்டாவது கட்ட தேர்தல் பிரச்சாரத்தில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசினார்.
கரூர் மாவட்டத்தில் நாளை (27-12-19) முதல்கட்ட தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மீதமுள்ள, கிருஷ்ணராயபுரம், குளித்தலை, கடவூர், தோகமலை ஆகிய 4 உள்ளாட்சி தேர்தலுக்கான தீவிர பிரச்சாரம் ஆங்காங்கே நடைபெற்று வரும் நிலையில், கரூர் மாவட்டத்தில் அ.தி.மு.க மற்றும் அ.தி.மு.க கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கரூர் அடுத்த மாயனூர், கட்டளை, உள் வீரராக்கியம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றார். 
 
இந்நிலையில், கரூர் மாவட்டத்தில் மணல் அள்ள தடை விதித்ததே, ஒருவர், அவருடன் தான் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கூட்டு வைத்து கொண்டு, அவ்வப்போது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுப்பதும், பின்னர் வழக்கு தொடர்ந்தவரின் பேக்கரியை திறந்து வைப்பதும் தான் மாஜி அமைச்சரின் வேலை என்றதோடு, வழக்கு தொடர்ந்தவரே, வழக்கை வாபஸ் பெற வைத்தால் இந்த பிரச்சினை இருக்காது என்ற அவர், மாட்டுவண்டிகள் மணல் அள்ள பிரச்சினை வந்ததும், நீதிமன்றம் சென்றதற்கும் மூலக்காரணமே, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தான் என்றும், இந்த உள்ளாட்சி தேர்தல் முடிந்தவுடன் நமது முதல்வருடன் சேர்ந்து உடனடியாக மாட்டுவண்டி தொழிலாளர்களின் வாழ்வாதார பிரச்சினையை உடனடியாக தீர்த்து வைக்கப்படும் என்றும் அவர் கூறினார். இந்நிகழ்ச்சியில் கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ கீதா உள்ளிட்டோரும்., வேட்பாளர்கள் மற்றும் அ.தி.மு.க கட்சியினரும், கூட்டணி கட்சியினரும் கலந்து கொண்டு வாக்குகள் சேகரித்தனர்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

2020ல் மத்திய அரசு, தமிழக அரசின் விடுமுறை தினங்கள் என்னென்ன தெரியுமா? இதோ தெரிந்து கொள்ளுங்கள்