Publish Date: Fri, 12 Nov 2021 (16:37 IST)
Updated Date: Fri, 12 Nov 2021 (16:44 IST)
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை பெய்து வருவதால் சென்னை, செங்கல்பட்டு, டெல்லா மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இன்று புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக மேலும் 16 மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
மேலும், கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்ட வாய்ப்புள்ளதால் நீலகிரி மாவட்டத்திற்கு நவம்பர் 12 முதல் 16 ஆம் தேதி வரை பயணத்தைத் தவிர்க்க பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.