Publish Date: Fri, 15 Oct 2021 (15:01 IST)
Updated Date: Fri, 15 Oct 2021 (15:04 IST)
நீலகிரியில் கடந்த 21 நாட்களாக போக்கு காட்டி வந்த டி23 புலியை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.
நீலகிரி மாவட்டம் மசினக்குடி பகுதியில் உள்ள சிங்காரா வனப்பகுதியில் பதுங்கியுள்ள டி23 புலி இதுவரை 4 பேரை அடித்துக் கொன்றுள்ளது. கடந்த 21 நாளாக இந்த புலியை உயிருடன் பிடிக்க வனத்துறையினர் ட்ரோன் கேமரா, கும்கி யானைகள் கொண்டும் தொடர்ந்து புலியின் நடமாட்டத்தை கவனித்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று புலியின் இருப்பிடத்தை கண்டறிந்த வனத்துறையினர் மயக்க ஊசியால் புலியை சுட்டுள்ளனர். எனினும் சிக்காமல் புலி தப்பி காட்டுக்குள் பதுங்கியது. இந்நிலையில் மீண்டும் புலியை தேடத்தொடங்கிய வனத்துறையினர் தற்போது மீண்டும் மயக்க ஊசி செலுத்தி புலியை பிடித்துள்ளனர். இதுவரை 4 மனிதர்களையும், 30க்கும் மேற்பட்ட கால்நடைகளையும் புலி தாக்கி கொன்றுள்ளது குறிப்பிடத்தக்கது.