Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Monday, 14 April 2025
webdunia

பேஸ்புக் போனா பளார்னு அடி..! அடிப்பதற்கு சம்பளம்! – நூதனமான வேலை!

Advertiesment
World
, வெள்ளி, 12 நவம்பர் 2021 (16:30 IST)
தான் பேஸ்புக் பயன்படுத்தாமல் இருக்க அடிப்பதற்காக ஒரு பெண்ணை மென்பொறியாளர் வேலைக்கு அமர்த்தியுள்ளது வைரலாகியுள்ளது.

தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியால் அனைவரது கைகளிலும் குறைந்த விலையிலேயே சகல வசதிகளும் கொண்ட செல்போன்கள் கிடைத்து விடுகின்றன. இதனால் மக்கள் பலரும் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பல மணி நேரங்களை தினசரி கழிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

அமெரிக்காவை சேர்ந்த மென்பொறியாளர் ஒருவர் இவ்வாறாக அதிக நேரம் பேஸ்புக்கில் மூழ்கி கிடந்துள்ளார். அதிலிருந்து எப்படி வெளியேறுவது என யோசித்த அவர் அதற்கு வித்தியாசமான ஒரு முறையை கையாண்டிருக்கிறார். தான் பேஸ்புக் உபயோகித்தால் கன்னத்தில் அறைவதற்காகவே ஒரு பெண்ணை பணிக்கு அமர்த்தியுள்ளார். இந்த பெண்ணுக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.600 சம்பளமாம். இதனால் தான் பேஸ்புக்கில் மூழ்காமல் பணியில் கவனம் செலுத்த முடிவதாக அவர் தெரிவித்துள்ளார். இதை பார்த்த நெட்டிசன்கள் பலர் தங்களுக்கும் இதுபோன்ற வேலை கிடைக்குமா என தேடி வருகிறார்களாம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தேங்கிய மழைநீர் அகற்றம்: மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பும் சென்னை!!