Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திமுக பிரமுகருக்கு போலீஸ் சீருடையில் கேக் ஊட்டிய பெண் இன்ஸ்பெக்டர்

Advertiesment
மன்னார்குடி | திமுக பிரமுகர் | கேக் ஊட்டிய பெண் இன்ஸ்பெக்டர் | tuticorin firing | Tiruvarur | sterlite protest | police inspector jayanthi | dmk birthday celebration in jail
, சனி, 26 மே 2018 (22:24 IST)
திமுக பிரமுகர் ஒருவருக்கு போலீஸ் சீருடை அணிந்த பெண் இன்ஸ்பெக்டர் ஒருவர் கேக் ஊட்டியதாக வெளிவந்துள்ள செய்தியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ஒன்றிய திமுக மாணவர் அணி அமைப்பாளராக இருப்பவர் சிவச்சந்திரன். இவர் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தைக் கண்டித்து தனது ஆதரவாளர்களுடன் வடுவூரில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டார். 
 
இந்த நிலையில் போராட்டம் செய்தவர்களை வடுவூர் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி தலைமையிலான காவல்துறையினர் கைது செய்து, காவல் நிலையம் அழைத்து சென்றனர். ஆனால அன்றைய தினம் சிவச்சந்திரனுக்கு பிறந்தநாள் என்று போலீசாரிடம் கூறியதாகவும், இதனை அடுத்து காவல் நிலையத்திலேயே சிவசந்திரனின் பிறந்த நாள் கேக் வெட்டி கொண்டாடப்பட்டதாகவும் தெரிகிறது. 
 
அந்த சமயத்தில் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி மற்றும் போலீசார், சிவச்சந்திரனுக்கு கேக் ஊட்டிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கைது செய்யப்பட்ட ஒருவரின் பிறந்த நாளை காவல்நிலையத்திலேயே கொண்டாடியது மட்டுமின்றி அந்த காவல்நிலையத்தின் பெண் இன்ஸ்பெக்டர் கேக் ஊட்டியதை நெட்டிசன்கள் கண்டித்து வருகின்றனர். 
 
webdunia
இந்த சம்பவம் குறித்து டிஎஸ்பி அசோகன் தலைமையில் விசாரணை நடத்த, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பொதுமக்கள் மீது இரக்கம் கொள்ளாத அமைச்சர் அரசுப் பேருந்துகள் மீது இரக்கமா ? அமைச்சரின் சர்சை பேட்டி