Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரெய்டின் நோக்கம் இதுதானா? உடைந்தது மன்னார்குடி அணி?

ரெய்டின் நோக்கம் இதுதானா? உடைந்தது மன்னார்குடி அணி?
, வியாழன், 16 நவம்பர் 2017 (05:44 IST)
சசிகலா குடும்பத்தினர்களின் ஒட்டுமொத்த நபர்களின் வீடுகள், அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த 9ஆம் தேதி சோதனை நடந்ததற்கு எத்தனையோ காரணங்கள் கூறப்படுகின்றன. அவற்றில் அரசியல் காரணங்களும் அடங்கும்


 


இந்த நிலையில் சசிகலா குடும்பத்தினர்களிடையே ஏற்பட்ட மனக்கசப்பு, பிரிவினை, ஒருவரை ஒருவர் போட்டுக்கொடுக்கும் குணம்தான் ரெய்டுக்கு காரணமாக இருந்ததாக கூறப்படுகிறது

கடந்த சில மாதங்களாகவே தினகரன், விவேக் ஆகியோர் இரு அணிகளாக பிரிந்து செயல்பட்டதாகவும், அதிமுக அம்மா அணியில் தினகரன் மட்டும் ஆதிக்கம் செலுத்துவதை விவேக் விரும்பவில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்த போட்டி மனப்பான்மையை பயன்படுத்தி கொண்ட மத்திய, மாநில அரசுகள் மன்னார்குடி குடும்பத்தை இரண்டாக பிரிக்க செய்த முயற்சியே இந்த ரெய்டு என்றும், அவர்கள் எதிர்பார்த்தபடியே தற்போது மன்னார்குடி சொந்தங்கள் இரண்டு அணிகளாக பிரிந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரூ.580 கோடிக்கு அடகு வைக்கப்பட்டதா போக்குவரத்து கழகத்தின் பணிமனைகள்?