விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் வாக்குச்சாவடியில் வாக்களிக்க வந்த பெண்ணிற்கு கத்திக்குத்து சம்பவம் நிகழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட கொசப்பாளையம் வாக்குப்பதிவு மையத்தில் வரிசையில் காத்திருந்த கனிமொழி என்ற பெண்ணிற்கு கத்திக்குத்து சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கனிமொழியை கத்தியால் குத்திவிட்டு தப்ப முயன்றது அவருடைய முன்னாள் கணவர் ஏழுமலை என்று கூறப்படும் நிலையில் தப்பியோட முயன்ற அவரை மடக்கிப் பிடித்த போலீசார் அவரிடம் விசாரணை செய்து வருகின்றனர்.
கனிமொழியை கத்தியால் குத்திவிட்டு தப்ப முயன்ற ஏழுமலை ஏற்கனவே இரட்டை கொலை வழக்கில் சிறைக்கு சென்று வந்தவர் என தகவல் வெளியாகியுள்ளது.
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் எந்தவிதமான அசம்பாவிதமும் இல்லாமல் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நடைபெற்று வரும் நிலையில் ஒரு வாக்கு சாவடியில் மட்டும் திடீரென பெண்ணுக்கு கத்துக்குத்து சம்பவம் ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆனால் இந்த கத்துக்குத்து சம்பவத்திற்கு அரசியல் காரணம் எதுவும் இல்லை என்றும் குடும்ப தகராறு காரணமாகவே ஏற்பட்டுள்ளது என்றும் காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த சம்பவம் காரணமாக அந்த வாக்குச்சாவடி அருகே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.