Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்.. தொடங்கியது வாக்குப்பதிவு.. யாருக்கு வெற்றி..!

Vikranvandi

Siva

, புதன், 10 ஜூலை 2024 (07:45 IST)
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு சற்றுமுன் ஆரம்பித்து உள்ள நிலையில் விறுவிறுப்பாக வாக்காளர்கள் வாக்குகளை பதிவு செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் புகழேந்தி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திடீரென காலமானதை அடுத்து இந்த தொகுதிக்கு ஜூலை 10ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

அதன்படி விக்கிரவாண்டி தேர்தலில் திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா, நாம் தமிழர் கட்சி வேட்பாளராக அபிநயா பொன்னிவளவன், பாமக வேட்பாளராக அன்புமணி போட்டியிடும் நிலையில் இன்று அதிகாலை வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது.

இந்த தொகுதியில்  2.37 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர் என்பதும் 276 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு என்று நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தேர்தலின் போது எந்தவித அசம்பாவிதமும் நடைபெறக் கூடாது என்பதற்காக விழுப்புரம் சரகர் போலீஸ் தலைமையில் மத்திய துணை ராணுவ படையினர் 220 பேர் உள்பட 2651 பேர் தொகுதி முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

திமுக, பாமக, நாம் தமிழர் என மூன்று முக்கிய அரசியல் கட்சி வேட்பாளர்கள் உட்பட மொத்தம் 29 வேட்பாளர்கள் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றனர். அதிமுக இந்த தேர்தலை புறக்கணித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

2018 பட இயக்குனரோடு கைகோர்க்கும் சிம்பு… இந்த சூப்பர் ஸ்டார் நடிகரும் இருக்காரா?- கசிந்த தகவல்!