Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஒரே மேடையில் அண்ணாமலை, டிடிவி, ஓபிஎஸ்.. களை கட்டும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்..!

Advertiesment
ஒரே மேடையில் அண்ணாமலை, டிடிவி, ஓபிஎஸ்.. களை கட்டும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்..!

Siva

, வியாழன், 4 ஜூலை 2024 (21:41 IST)
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் ஜூலை 10ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் பிரச்சாரம் களைகட்டி வருகிறது என்பது தெரிந்தது. 
 
ஒரு பக்கம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க இருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் அண்ணாமலை, டிடிவி தினகரன், ஓபிஎஸ் ஆகிய மூவரும் ஒரே மேடையில் உட்கார்ந்து பிரச்சாரம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
 
விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான என்டிஏ கூட்டணியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் அன்புமணியை ஆதரித்து பிரசாரம் செய்ய நடந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பாமக வேட்பாளர் அன்புமணியை ஆதரித்து அன்புமணி ராமதாஸ், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ஜி.கே.வாசன், பாரிவேந்தர், தேவநாதன், ஓபிஎஸ், டிடிவி தினகரன், ஜான் பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 
இந்த நிலையில் விக்கிரவாண்டி தொகுதிக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஜூலை 6, 7, 8 ஆகிய மூன்று நாட்கள் பிரச்சாரம் செய்ய இருப்பதாகவும் உள்ளூர் திமுக நிர்வாகிகள் இந்த பிரச்சார ஏற்பாடுகளை செய்து வருவதாக கூறப்படுகிறது 
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

AI தொழில்நுட்பத்துடன் Motorola Razr 50 Ultra அறிமுகம்! விலை எவ்வளவு தெரியுமா?