Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கரூர் துயரம்: வதந்தி வீடியோவை பரப்பிய 25 பேர் மீது வழக்கு.. விரைவில் கைது! - சென்னை காவல்துறை அதிரடி!

Advertiesment
Karur Stampede

Prasanth K

, திங்கள், 29 செப்டம்பர் 2025 (17:37 IST)

கரூர் கூட்டநெரிசல் பலி குறித்து வதந்திகளை பரப்பிய 25 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.

 

கரூரில் கடந்த சனிக்கிழமை நடந்த தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் பலியான சம்பவம் தேசிய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதை தொடர்ந்து இந்த பிரச்சாரக் கூட்டத்தில் சதி நடந்துள்ளதாக சந்தேகிப்பதாக தவெக சார்பில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. தவெகவினர் பலரும் இதில் சதி இருப்பதாக சந்தேகம் தெரிவித்து வீடியோக்களை ஷேர் செய்து வருகின்றனர்.

 

இந்நிலையில் வீடியோ வெளியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், நடந்த துயர நிகழ்வு அரசியலுக்கு அப்பாற்பட்டது என்றும், இதுகுறித்து அவதூறு, சமூக அமைதியை குலைக்கும், வதந்தி வீடியோக்களை யாரும் பரப்ப வேண்டாம் என கேட்டுக் கொண்டார். அதை தொடர்ந்து வதந்திகளை பரப்புபவர்கள் குறித்த தகவல்களை காவல்துறை சேகரித்து வருவதாக தகவல்கள் வெளியானது.

 

தற்போது கரூர் சம்பவம் குறித்து வதந்திகளை வீடியோவாக பரப்பியதாக 25 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. விரைவில் அவர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ள காவல்துறை, பொதுமக்களுக்கு அச்சம் ஏற்படுத்தும் வகையிலும், பொது மக்கள் அமைதியை குலைக்கும் விதமாகவும் யாரும் சமூக வலைதளங்களில் பதிவிட வேண்டாம் என்று காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தலித் பெண்களை மதம் மாற்ற முயற்சித்ததாக குற்றச்சாட்டு.. 43 வயது நபர் கைது..!