Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கரூர் கூட்ட நெரிசல் பலி 41 ஆக உயர்வு! தொடரும் சோகம்!

Advertiesment
Karur stampede

Prasanth K

, திங்கள், 29 செப்டம்பர் 2025 (10:02 IST)

கரூரில் தவெக பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி பலியானவர்கள் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது.

 

கடந்த சனிக்கிழமை கரூரில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில் ஏற்பட்ட கடும் கூட்ட நெரிசலில் பலர் சிக்கி மயங்கி விழுந்து உயிரிழந்தனர். பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தனர்.

 

நேற்றைய நிலவரப்படி 40 பேர் பலியாகியிருந்த நிலையில் அதில் 34 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டது. இந்நிலையில் இன்று சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒரு பெண் பலியாகியுள்ளார். இதனால் பலி எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது.

 

வேலுச்சாமிபுரத்தை சேர்ந்த 65 வயது சுகுணா என்ற பெண்மணி தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். தவெக கூட்டம் நடந்த வழியாக அவர் கடந்து வந்தபோது நெரிசலில் சிக்கியதாக கூறப்படுகிறது. இரவு நீண்ட நேரமாகியும் சுகுணா வராததால் அவரை உறவினர்கள் தேடிய நிலையில், அவர் கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தகவல் கிடைத்துள்ளது. அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி பலியானதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தங்கம் விலை மீண்டும் உயர்வு.. ஒரு சவரன் ரூ.86,000ஐ நெருங்குவதால் பரபரப்பு..!