லக்னோவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக மதம் மாற்றும் செயலில் ஈடுபட்டதாக கூறப்படும் 43 வயது மல்கான் என்பவர் கைது செய்யப்பட்டார்.
பஜ்ரங் தளம் உறுப்பினர் தர்மேந்திர ஷர்மா அளித்த புகாரில் மல்கான், அப்பகுதியில் உள்ள ஏழை மற்றும் எளிய குடும்பங்களை குறிவைத்து மதம் மாற்றுவதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.
மேலும் மல்கான் தனது விவசாய நிலத்தில் ஒரு பெரிய மண்டபத்தை கட்டி, ஒவ்வொரு வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வாராந்திர குணப்படுத்தும் பிரார்த்தனைகளை நடத்தி வந்துள்ளார். இந்த சந்திப்புகளின்போது, தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் மதம் மாறும்படி வற்புறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
காவல்துறை குழு அந்த மண்டபத்தை சோதனை செய்து மல்கானை கைது செய்தது. சட்டவிரோத கூட்டங்களுக்குப் பயன்படுத்தப்பட்ட மண்டபத்திற்கு சீல் வைக்கப்பட்டது. சோதனையின்போது, மல்கானிடமிருந்து இரண்டு பைபிள் பிரதிகள் மற்றும் மதப்பிரசுரங்கள் கைப்பற்றப்பட்டன.
இந்த சம்பவம் லக்னோவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.