Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தவெக தொண்டர்களை காவலர்கள் தாக்கிய வீடியோ ஆதாரம் உள்ளது! - தவெக வழக்கறிஞர்

Advertiesment
TVK Lawyer

Prasanth K

, திங்கள், 29 செப்டம்பர் 2025 (14:58 IST)

கரூர் பிரச்சாரத்தில் சதி நடந்துள்ளதாக தொடரப்பட்ட வழக்கின் தன்மை குறித்து தவெக வழக்கறிஞர் அறிவழகன் பேட்டி அளித்துள்ளார்.

 

கடந்த சனிக்கிழமை கரூரில் நடந்த தமிழக வெற்றிக் கழக பிரச்சாரத்தில் விஜய் பேசிய நிலையில், அதில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானார்கள். மேலும் பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் கரூர் பிரச்சாரத்தில் சதிவேலை நடந்திருப்பதாக தவெக நீதிமன்றத்தை நாடியுள்ளது. இன்று இந்த வழக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நடைபெறுகிறது. இந்த வழக்கில் தவெக சார்பில் வழக்கறிஞர் அறிவழகன் ஆஜராகியுள்ளார்

 

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் “தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது. பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் மற்றும் உயிரிழப்பிற்கு போலீஸாரின் தடியடிதான் காரணம். களத்தில் நடந்ததை வீடியோ பதிவு செய்துள்ளோம். நீதிமன்றத்தில் அதை சமர்ப்பிக்க உள்ளோம்.

 

குழந்தைகள், பெண்கள் கூடும்போது பாதுகாப்பு அளிக்க வேண்டியது அரசின் கடமை. பாதுகாப்பு விவகாரத்தில் காவல்துறை கடமை தவறியுள்ளது” எனக் கூறியுள்ளார்.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் நடத்த கூடாது: கேரள சட்டமன்றத்தில் தீர்மானம்!