தமிழகம் கொரோனா இரண்டாம் அலையால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் கருப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கருப்பு பூஞ்சை நோய் தொற்று தமிழகத்தில் அதிகரிப்பதற்கு முன்னதாக தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என அரசியல் கட்சியினர் உட்பட பலர் கோரிக்கைகளை வைத்து வருகின்றனர். மேலும், கருப்பு பூஞ்சை நோயை பரவும் நோயாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில் சேலம் அரசு மருத்துவமனையில் கருப்பு பூஞ்சை அறிகுறியுடன் இருவர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் வீங்கிய முகத்துடன் கண்ணில் பூஞ்சை தொற்றுடன் அனுமதிக்கப்பட்டுள்ளார். மற்றொரு பெண் கை நெருப்பில் கருகியது போல் உள்ளது. இந்நோய் தாக்கத்தின் அறிகுறி பெரும் அச்சத்தை ஏற்படுத்துகிறது.