தமிழகத்தில் கருப்பு பூஞ்சை பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ள நிலையில் அதற்கு தேவையான மருந்துகளை வாங்க உத்தரவு வெளியாகியுள்ளது.
தமிழகம் கொரோனா இரண்டாம் அலையால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் கருப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கருப்பு பூஞ்சை நோயை பரவும் நோயாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதனால் கருப்பு பூஞ்சை நோய் தொற்று தமிழகத்தில் அதிகரிப்பதற்கு முன்னதாக தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என அரசியல் கட்சியினர் உட்பட பலர் கோரிக்கைகளை வைத்து வருகின்றனர்.
இந்நிலையில் கருப்பு பூஞ்சை தொற்றிற்கு சிகிச்சை அளிக்க 5 ஆயிரம் குப்பி மருந்துகளை வாங்க தமிழக மருத்துவ பணிகள் கழகம் உத்தரவிட்டுள்ளது. மேலும் தனியார் மருத்துவமனைகள் தங்களுக்கு தேவையான மருந்துகளை அந்தந்த முகமைகள் மூலம் வாங்கி கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.