Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கலைஞரால் வீர அபிமன்யு என புகழப்பட்டவர் "பரிதி இளம்வழுதி" - மு.க. ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல்

கலைஞரால் வீர அபிமன்யு என புகழப்பட்டவர்
, சனி, 13 அக்டோபர் 2018 (10:51 IST)
கலைஞரால் வீர அபிமன்யு என பாராட்டபட்டவர் "பரிதி இளம்வழுதி" - மு.க ஸ்டாலின் 
 
முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 58. 
 
சென்னையை சேர்ந்தவர் பரிதி இளம்வழுதி. இவர் கடந்த 2006-11-இல் திமுக ஆட்சியில் செய்தி மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சராக இருந்தார். பின்னர் திமுகவில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக அவர் அதிமுகவில் இணைந்தார். 
 
திமுகவில் உறுப்பினர் முதல் துணைப்பொதுச்செயலாளர் வரை பதவி வகித்த பரிதி இளம்வழுதி. 6 முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். திமுக ஆட்சிக் காலத்தில், 1996-2001 காலகட்டத்தில் துணை சபாநாயகராக பதவி வகித்த பரிதி, அதன் பின்னர் 2006-2011 காலகட்டத்தில் திமுக ஆட்சியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சராகவும் பரிதி இளம்வழுதி பணியாற்றினார்.
webdunia
 
மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு நெருக்கமாக பரிதி , பிறகு  கருத்து வேறுபாடு காரணமாக தி.மு.கவில் இருந்து விலகி, பின் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். ஜெயலலிதா காலமான பிறகு ஓபிஎஸ் அணியிலும், அதற்கு பிறகு  பிறகு டிடிவி தினகரன் ஆதரவாளராகவும் இருந்தார்.
 
இந்நிலையில், அண்மைக்காலமாக உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்றுவந்தார் பரிதி . இதற்கிடையே, இன்று காலை அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து சென்னை அடையாற்றில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்குச் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார். 
 
சென்னை பெசன்ட் நகரில் உள்ள அவரது இல்லத்தில் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவருக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். பிறகு  செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், மறைந்த கலைஞரால் இந்திரஜித் என்றும், வீர அபிமன்யு என்றும் புகழ்ந்து  பாராட்டப்பட்டவர் தான் பரிதிஇளம்வழுதி எனக் குறிப்பிட்டார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சின்மயி புகார் கொடுத்தால் நடவடிக்கை - மாஃபா பாண்டியராஜன் பேட்டி