Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

#MeToo: பாத்திமா பாபுவை கோபப்படுத்திய மீம்ஸ்

#MeToo: பாத்திமா பாபுவை கோபப்படுத்திய மீம்ஸ்
, வெள்ளி, 12 அக்டோபர் 2018 (19:27 IST)
#MeToo என்னும் ஹேஸ்டேக் தற்போது இந்தியாவில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் ஒன்றாக உள்ளது. பாடகி சின்மயி, வைரமுத்து பற்றி அதிர்ச்சி செய்திகளை வெளியிட்டதில் இருந்து அடுத்தடுத்து பல நடிகைகள் இந்த ஹேஸ்டேக்கை பயன்படுத்தி தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகள் குறித்து கருத்து வெளியிட்டு வருகின்றனர். 
 
இந்நிலையில், இணையத்தில் உலாவும் ஒரு மீம்மால் பாத்திமா பாபு மீம் கிரியேட்டர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். அந்த மீம் கூறுவது என்னவென்றால், #MeToo ஹேஷ்டேட்கை பயன்படுத்தி பாத்திமா பாபு ஒரு போஸ்ட் போட்டால், என்னவாகும் எனவும், எத்தனை ஆண்டுகள் கழித்து புகார் கொடுத்தாலும் ஏற்றுக்கொள்ள ரெடி என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 
இதை கண்டு கடும் கோபமான பாத்திமா பாபு அந்த மீம்களை பகிர்ந்து எச்சரிக்கையும் விடுத்துள்ளார். பாத்திமா பாபு குறிப்பிட்டுள்ளது பின்வருமாறு, 
 
இந்த மீம்களை மெனக்கெட்டு தயாரித்தவர்களுக்கு ஒரு ஐயோ பாவம் மற்றும் படிப்பவர்களை புன்னகைக்க வைத்த வகையில் உங்களுக்கு கிடைத்த வெற்றிக்கு பிடியுங்கள் என் வாழ்த்தையும். இரண்டு விஷயம். 
 
1) இந்த அதீத கற்பனை உங்களளவில் உண்மையெனில் பாதிக்கப்பட்டவரின் பெயரையோ புகைப்படத்தையோ பயன்படுத்துவது சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டிய குற்றம்.
 
2) இப்படியொரு சம்பவம் நடக்கவில்லை என்பதை இந்த வதந்தி உருவான ஆண்டிலிருந்தே என்னிடம் விளக்கம் கேட்ட பத்திரிகைகளிடமும் நண்பர்களிடமும் சொல்லி வந்திருக்கிறேன். யாராவது ஒரே ஒருவர் - ஒரு ஒற்றை ஆள் - மேடம் என்னிடம் நீங்கள் பாதிக்கப்பட்டதாகக் கூறியிருக்கிறீர்கள் என்று சொல்ல முடியுமா?
 
உண்மை இப்படி இருக்க மீண்டும் மீண்டும் என் பெயரை இழுக்கும் உங்கள் மேல் நான் அவதூறு வழக்கு போடலாம். ஆனால் எனக்கு அதைவிட அழகான வாழ்க்கை இருக்கிறது வாழ்ந்து முடிக்க. ஆகவே இந்த மீம்களை உருவாக்கி பரப்புவோரே போய் உங்க வேலையை பாருங்க என குறிப்பிட்டுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வேலை நேரத்தில் சிரிக்கக் கூடாதுங்கோ...போலீஸுக்கு உத்தரவு...