Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி உடல்நலக் குறைவால் காலமானார்.

முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி உடல்நலக் குறைவால்  காலமானார்.
, சனி, 13 அக்டோபர் 2018 (09:23 IST)
திமுக விலும் அதிமுகவிலும் முக்கியமான பதவிகள் வகித்த முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சராகப் பணியாற்றிய பரிதி இளம்வழுதி சென்னையில் இன்று காலமானார்.

சென்னையைச் சேர்ந்த பரிதி இளம்வழுதி முதன் முதலாக 1984 ஆம் ஆண்டு தன் 25 வது வயதில் சட்டமன்ற உறுப்பினராக திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிப் பெற்றார். 1989-ல் இருந்து 2011 வரை தொடர்ச்சியாக 6 முறை எக்மோர் தொகுதியில் போட்டியிட்டு சட்ட மன்ற உறிப்பினராகத் தேர்வு செய்யப்படுள்ளார்.

1991-தேர்தலில் ராஜீவ்காந்தி படுகொலையால் திமுக வேட்பாளர்கள் அனைவரும் தோலிவியுற்ற நிலையில் இவரும் திமுக தலைவர் கருணாநிதி மட்டுமே திமுக சார்பில் வெற்றி பெற்றனர். கலைஞரும் தன் பதவியை ராஜினாமா செய்துவிட தனியொரு உறுப்பினராக சட்டசபையில் ஆளும்கட்சிக்கு எதிராக செயல்பட்டார்.

1996-2001 திமுக ஆட்சியில் துணை சபாநாயகராகவும், 2006-2011 திமுக ஆட்சியில் செய்தி மற்றும் விள்மபரத்துறை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். திமுக வின் முக்கியத் தலைவராக கருதப்பட்ட இவர் திடீரென் 2013-ல் திமுக வில் இருந்து விலகி ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னால் அதிமுகவில் எற்பட்ட கட்சி உடைப்பில் ஓபிஎஸ்-க்கு ஆதரவு தெரிவித்தார். சமீப காலமாக டிடிவி தினகரனோடு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இணைந்து அவருக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தார்.

இந்நிலையில் உடல்நிலைக் கோளாறு காரணமாக அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 59.

அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கள் தெரிவித்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முதல்வர் மீது சிபிஐ விசாரணை: மேல்முறையீடு செய்ய முடிவு