ட்ரம்ப் வரிவிதிப்பால் வேலையிழப்பு! திருப்பூரை விட்டு வெளியேறும் பீகார் தொழிலாளிகள்!

Prasanth K
திங்கள், 15 செப்டம்பர் 2025 (14:38 IST)

அமெரிக்க வரிவிதிப்பு எதிரொலியாக திருப்பூரில் வேலையிழப்பு அதிகரித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

 

திருப்பூர் ஆயத்த ஆடை ஏற்றுமதிக்கு உலகம் முழுவதும் பல நாடுகளில் வரவேற்பு இருந்து வருகிறது. முக்கியமாக அமெரிக்காவிற்கு ஆயத்த ஆடைகள் அதிகமாக ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்நிலையில் சமீபத்தில் அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் விதித்த 50 சதவீத வரிவிதிப்பால், அமெரிக்க ஒப்பந்தக்காரர்கள் திருப்பூர் ஏற்றுமதியை தவிர்த்துள்ளனர். இதனால் ரூ.5000 கோடி மதிப்பிலான ஆடைகள் தேங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

மேலும் அமெரிக்காவிலிருந்து வரும் ஆர்டர்களும் குறைந்து விட்டதால் ஆயத்த ஆடை ஆலைகளில் ஆட்குறைப்பு செய்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. முக்கியமாக திருப்பூர் ஆடை ஆலைகளில் பெரும்பாலான பீகார் தொழிலாளர்கள் வேலை பார்த்து வந்த நிலையில், தற்போது பலரும் வேலையை இழந்து சொந்த ஊருக்கு திரும்ப செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 

தீபாவளி நெருங்கி வரும் நிலையில் ஆடைகள் ஏற்றுமதியில் களைக்கட்டும் திருப்பூர் தற்போது பொலிவிழந்து காணப்படுகிறது. விரைவில் இந்த வரி விதிப்பில் மாற்றங்கள் ஏற்படாவிட்டால் பின்னலாடை நிறுவனங்கள் பெரும் சரிவை சந்திக்கும் என தொழில் நிறுவனங்கள் கவலை தெரிவிக்கின்றன.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வடகிழக்குப் பருவமழை தீவிரம் அடைந்துள்ளது: தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு..!

திடீரென தலைகீழாக குறைந்த தங்கம் விலை.. வெள்ளியும் திடீரென ரூ.13000 குறைந்ததால் பரபரப்பு..!

ஒரே சமயத்தில் இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதிகள்.. கனமழை எச்சரிக்கை..!

பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் போரை நிறுத்துவது எல்லாம் எனக்கு ஒரு நிமிட வேலை: டிரம்ப்

ஆர்.எஸ்.எஸ் விழாவில் கலந்து கொண்ட அரசு ஊழியர் சஸ்பெண்ட்.. அரசின் அதிரடி நடவடிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments