Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பி.எட். மாணவர்களுக்கு விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்பு.. அமைச்சர் தகவல்..!

Advertiesment
பி.எட்

Siva

, திங்கள், 15 செப்டம்பர் 2025 (13:39 IST)
உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, பி.எட். மற்றும் எம்.எட். மாணவர்களுக்கான விண்ணப்பப் பதிவுத் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு ஒரு செய்திக்குறிப்பாக வெளியிடப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் ஆலோசனையின்படி, ஜூன் 20, 2025 அன்று பி.எட். மாணவர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு தொடங்கி நடைபெற்றது.
 
முதல் கட்டக் கலந்தாய்வுக்குப் பிறகு, அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் உள்ள காலி இடங்கள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, 2 அரசு கல்வியியல் கல்லூரிகளில் 49 இடங்களும், 13 அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் 530 இடங்களும் என மொத்தம் 579 இடங்கள் காலியாக உள்ளன.
 
இணையதளத்தில் விண்ணப்பிக்கத் தவறிய மாணவர்கள் இந்த காலி இடங்களில் சேர்வதற்காக, விண்ணப்பப் பதிவு வசதி இன்று (செப்டம்பர் 15) முதல் செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் www.tngasa.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்துப் பயன் அடையலாம். மேலும், மாணவர் சேர்க்கை குறித்த கூடுதல் விவரங்களை www.lwiase.ac.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
 
அதேபோல், எம்.எட். பாடப்பிரிவில் காலியாக உள்ள இடங்களுக்கு விண்ணப்பிக்கத் தவறிய மாணவர்களும் செப்டம்பர் 30 வரை www.tngasa.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பித்துப் பயன்பெறலாம் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எம்ஜிஆரை யாரோடும் ஒப்பிட வேண்டாம்: விஜய் குறித்த கேள்விக்கு விஜயபாஸ்கர் பதில்..!