Publish Date: Fri, 06 Feb 2026 (10:34 IST)
Updated Date: Fri, 06 Feb 2026 (10:36 IST)
மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நிறைய வரி செலுத்த வேண்டி இருந்தது. ஆனால் அவர் செலுத்தவில்லை. தற்போது அவர் மறைந்துவிட்ட நிலையில் இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.. 13 கோடி வரி செலுத்த வேண்டும் என அமலாக்கத்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. தற்போது ஜெயலலிதாவின் வாரிசாக அவரின் அண்ணன் மகன் தீபக் அறிவிக்கப்பட்டுள்ளதால் அவர் 1.2 கோடி வரி மட்டும் செலுத்தியிருக்கிறார்..
வருமானத்துறை அனுப்பிய நோட்டீசை எதிர்த்து தீபக் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது மீதமுள்ள வரியை செலுத்தாவிடில் ஜெயலலிதாவின் சொத்துக்களை ஏலம் விடுவோம் என வருமானத் துறை எச்சசரித்திருக்கிறது. வருமான வரித்துறை தரப்பின் வாதத்தை ஏற்ற சென்னை உயர்நீதிமன்றம் விசாரணையை வருகிற 18-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்திருக்கிறது..
அமலாக்கத்துறை கூறியபடி தீபக் மீதமுள்ள பாக்கி வரியை செலுத்தாவிட்டால் ஜெயலலிதாவின் சொத்துக்கள் ஏலம் விடப்படும் என தெரிகிறது. அப்படி செய்தால் அந்த சொத்துக்கள் தீபக் கையை விட்டு போகும் என்கிற நிலை உருவாகி இருக்கிறது.