சவுதி அரேபியாவின் மெக்காவிற்கு புனித பயணம் மேற்கொண்டவர்களில் 42 பேர் இருந்து விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இந்த சம்பவத்தில் பலியானவர்களுக்கு தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவர் தனது இரங்கல் அறிக்கையில் கூறியிருப்பதாவது: தெலுங்கானா மாநிலத்திலிருந்து சவுதி அரேபியாவின் மெக்காவிற்குப் புனிதப்பயணம் மேற்கொண்ட 42 பேர், மதீனா அருகே நிகழ்ந்த விபத்தில் காலமான செய்தியறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன்.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றேன்.