Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஜனவரி 6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஜாக்டோ ஜியோ அறிவிப்பால் பரபரப்பு..!

Advertiesment
பழைய ஓய்வூதியத் திட்டம்

Siva

, புதன், 26 நவம்பர் 2025 (08:39 IST)
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ, வரும் 2026 ஜனவரி 6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது, பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்வது, காலியிடங்களை நிரப்புவது, மற்றும் ஊதிய முரண்பாடுகளை களைவது உள்ளிட்ட பத்து முக்கிய கோரிக்கைகளுக்காக இந்த முடிவை ஜாக்டோ ஜியோ எடுத்துள்ளது.
 
இக்கோரிக்கைகளுக்காக ஏற்கனவே நவம்பர் 18 அன்று அடையாள வேலைநிறுத்தம் நடத்தப்பட்ட நிலையில், அடுத்தகட்ட போராட்ட வியூகங்கள் குறித்து நேற்று சென்னையில் நடைபெற்ற ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
 
கூட்டத்திற்கு பிறகு பேசிய மாநில ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன், கோரிக்கைகளை வலியுறுத்தி வட்டார அளவில் பிரச்சாரம், டிசம்பர் 13 அன்று மாவட்டத் தலைநகரங்களில் உண்ணாவிரதம், மற்றும் டிசம்பர் 27 அன்று வேலைநிறுத்த ஆயத்த மாநாடு ஆகியவை நடைபெறும் என்றும், அதன் தொடர்ச்சியாக ஜனவரி 6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடங்கும் என்றும் அறிவித்தார்.
 
Edited by Siva
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மலாக்கா ஜலசந்தியில் வலுவடைந்தது காற்றழுத்த தாழ்வு மண்டலம்: வானிலை ஆய்வு மையம் தகவல்