Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிரதமருக்கு கருப்புக் கொடி காட்டுவது தவறு - டி.டி.வி.தினகரன்

பிரதமருக்கு கருப்புக் கொடி காட்டுவது தவறு - டி.டி.வி.தினகரன்
, புதன், 11 ஏப்ரல் 2018 (07:44 IST)
சென்னைக்கு வரும் பிரதமர் மோடிக்கு கருப்புக்கொடி காட்டி எதிர்ப்பு தெரிவிப்பது தவறு என டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் குறித்து மத்திய, மாநில அரசின் மனுக்கள் மீதான வுசாரணை கடந்த 9-ந் தேதி உச்சநீதிமறத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. மத்திய அரசு வரைவுத் திட்டத்தை செயல்படுத்தி  மே 3ஆம் தேதி சமர்பிக்க வேண்டும் என விசாரணையை மே 3 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்.
 
இந்நிலையில்  பிரதமர் மோடி நாளை தமிழகம் வரும் போது, அனைத்து வீடுகளிலும் பிரதமருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கருப்புக்கொடியை கட்ட வேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார்.
webdunia
இதுகுறித்து பேசிய அமைச்சர் டிடிவி தினகரன், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசிற்கு எதிர்ப்பு தெரிவிக்கலாமே தவிர, தமிழகத்திற்கு பிரதமர் மோடி வருகையின்போது கருப்புக்கொடி காட்ட நினைப்பது தவறு என்றும் அதில் தனக்கு உடன்பாடு இல்லை எனவும்  தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரஜினிகாந்த், கமல்ஹாசனிற்கு எதிராக கர்நாடக விவசாயிகள் போராட்டம்