Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழனாய் ஆர்.ஜே. பாலாஜி செய்த காரியம்: வீடியோ உள்ளே...

Advertiesment
தமிழனாய் ஆர்.ஜே. பாலாஜி செய்த காரியம்: வீடியோ உள்ளே...
, செவ்வாய், 10 ஏப்ரல் 2018 (20:08 IST)
சேப்பாக்கம் மைதானம் அருகில் ஐபிஎல் போட்டி நடக்ககூடாது என போராட்டங்கள் நடந்த வந்த நிலையில், ஐபிஎல் போட்டி எந்த பாதிப்பும் இன்றி துவங்கியுள்ளது. 
 
இதற்கு இடையில் ஆர்.ஜே பாலாஜி வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. ஆர்.ஜே. பாலாஜி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது.
 
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி நடந்து கொண்டிருக்கும் போராட்டத்தில் ஒரு தமிழனாக என்னுடைய பங்களிப்பாக, இன்று சென்னையில் நடக்கும் சிஎஸ்கே போட்டியில் என் வேலையான கமெண்டரியை நான் செய்யவில்லை. 
 
இந்த முடிவை சம்பந்தப்பட்ட சேனலிடம் கூறியபோது அவர்கள் எங்களின் உணர்வுகளை மதித்து ஏற்று கொண்டதற்கு நன்றி. நாட்டின் கவனத்தை பெற இவ்வாறு போராடுவதாக கூறுகிறார்கள். 
 
ஆனால், நாம் ஓட்டு போட்டுள்ள 234 எம்எல்ஏக்களும், 40 எம்பிக்களும் மொத்தமாக ராஜினாமா செய்தால் நாட்டின் மொத்த கவனத்தையும் பெறலாம். 
 
ஒரு மாநிலத்தில் நிர்வாகமே இல்லையா என்று அனைவரும் திரும்பிப் பார்ப்பார்கள் என்கிறார் பாலாஜி. இது நல்ல ஐடியாவாக இருந்தாலும் எந்த எம்பியும் எம்எல்ஏவும் தங்ளது பதவியை ராஜினாமா செய்ய முன்வரமாட்டார்கள் என்பதே நிதர்சனமான உண்மை. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வரும் 12 ஆம் தேதி பிரதமர் மோடி உண்ணாவிரதம்...